பேட்மிட்டன் விளையாடி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாஜகவின் தேசிய மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வார காலமாக கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக தொண்டர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்றும், திறந்த ஜீப்பில் பயணம் செய்தும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று காலை பந்தய சாலை பகுதியில் பிரசாரத்தை தொடங்கி, தொண்டர்களுடன் நடந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பந்தயச் சாலையில் வாக்கிங் சென்றவர்களுடன் பேசிய வானதி சீனிவாசன் அவர்களிடம் தனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது முதியவர் ஒருவர் கையில் கீரை கட்டுடன் வானதி சீனிவாசனுடன் செல்ஃபி எடுக்க முயன்றார், அப்போது அவரது கையில் இருந்த கீரைகட்டை செல்பி எடுக்க வசதியாக வானதி சீனிவாசன் தன் கையில் வாங்கி வைத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்த விளையாட்டு திடலில் சிறிது நேரம் பேட்மின்டன் விளையாடிய வானதி சீனிவாசன், அங்கிருந்தவர்களிடம் ஆதரவு திரட்டினார். பின்னர் அப்பகுதியில் தேர்தல் ஆணையத்தால் வைக்கப்பட்டுள்ள 100 சதவிகித வாக்குப்பதிவுக்கான கையெழுத்து பதாகையில் வானதி சீனிவாசன் கையொப்பமிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu