கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட 870 மது பாட்டில்கள் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து  கடத்திவரப்பட்ட 870 மது பாட்டில்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

மினி லாரியில் இருந்த 12 பெட்டிகளை பறிமுதல் செய்தனர்

கோவையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் தொடர்ந்து கள்ளச்சந்தையில் நடைபெறும் மது விற்பனையை தடுக்க ரோந்து பணிகள் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியில் பதுக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மினி லாரியில் இருந்த 12 பெட்டிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் நடத்திய சோதனையில் 5 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பெட்டிகளில் இருந்து மொத்தம் 870 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல மளிகை கடை உரிமையாளரிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் கள்ளச்சந்தை மது விற்பனையில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்த சூர்யா, கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார் மற்றும் மளிகை கடை உரிமையாளர் முத்துக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!