பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் முறிந்து விழுந்து 5 பேர் காயம்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் முறிந்து விழுந்து 5 பேர் காயம்
X

பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறிந்து விழுந்த மரம்.

கூரைக்குள் இருந்த பொதுமக்கள் 5 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பத்திரப்பதிவு துறை அலுவலகம் ஆகியவை அருகருகே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தது. மரமானது அருகில் உள்ள பத்திரப் பதிவு அலுவலக வளாகத்திற்குள் சாய்ந்தது. இதில் பத்திரப் பதிவு அலுவலக வளாகத்தில் போடப்பட்டிருந்த கூரை மேல் விழுந்தது. இதில் கூரைக்குள் இருந்த பொதுமக்கள் 5 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சில சேதமடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!