50 வருடங்களில் போகாத ஏழ்மை, இலவசங்களால் ஒழிந்து விடுமா? - கமல் கேள்வி
கோவை இராமநாதபுரம் திருவள்ளூவர் நகர் பகுதியில் ம.நீ.ம தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தை சீரமைக்க வேண்டிய பெரும் பொறுப்பு எனக்கு இருக்கின்றது. எங்கிருந்தலும் மனது இங்குதான் இருக்கின்றது.
தொகுதிக்கு ஏற்றபடி தேர்தல் அறிக்கை தயாராகி கொண்டு இருக்கின்றது. நேர்மைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அடிக்கடி வருவேன். எனக்கு இது இன்னொரு வீடாக இருக்கின்றது. என்னை வெளியூர்கார்ர் என்று சொல்பவரே மயிலாப்பூர் அம்மா தான். யாதும் ஊரே யாவரும் கேளிர். ஆளுக்கு 10 பேருக்கு தகவல் சொன்னால் கோவை தெற்கு நமதாகும்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து ஓலம்பஸ் பகுதியில் ம.நீ.ம தலைவர் கமலஹாசன் பேசிய போது, "கோவையிலேயே சுற்றிவர மனசு ஆசைப்படுகிறது. 234 தொகுதிகளில் சுற்றி வருவதால், கோவையில் தினமும் வர முடியவில்லை.
மக்களின் பிரச்சனைகள் அறிந்து தீர்ப்பதே என்னுடைய கடமை. கடந்த 50 வருசத்தில் போகாத ஏழ்மை, இப்போது இவர்கள் கொடுக்கும் இலவசத்தால் ஏழ்மை ஒழிந்து விடுமா?. என்னை கருவியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வருடம் முழுவதும் உங்களுக்கு நாங்கள் மீன் குழம்பு வைத்து தர மாட்டோம்.
தூண்டிலும் மீன்பிடிக்கும் படகும் வழங்கி மீன் பிடிக்கக் கற்றுத் தருவோம். வறுமைக் கோட்டுக்கு மேல் உங்களைக் கொண்டு வந்து விட்டால் அயோக்கியர்களை நீங்கள் திரும்பிப் பார்க்க மாட்டீர்கள்" இவ்வாறு தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu