/* */

கோவையில் 7 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடி மோதல்

கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் அதிமுக 9 தொகுதிகளிலும், திமுக 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதில் 7 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடி மோதல்

HIGHLIGHTS

கோவையில் 7 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடி மோதல்
X

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தமது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடித்து, வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் அதிமுக 9 தொகுதிகளிலும், திமுக 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

கோவை தெற்கு தொகுதியை இரு கட்சிகளும் கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளன. இங்கு காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய 7 தொகுதிகளில் திமுக, அதிமுக இருகட்சிகளும் நேரடியாக மோதுகின்றன. திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சூலூர் தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வால்பாறை தொகுதியிலும் அதிமுகவை எதிர்த்து களமிறங்குகிறது.

Updated On: 12 March 2021 2:11 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  பெரியாறு அணை போராட்டக்களத்தில் இறங்கிய தமிழக நிருபர்கள்..!
 2. லைஃப்ஸ்டைல்
  திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
 3. லைஃப்ஸ்டைல்
  உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
 4. லைஃப்ஸ்டைல்
  வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
 5. லைஃப்ஸ்டைல்
  முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
 6. இந்தியா
  மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
 7. லைஃப்ஸ்டைல்
  வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
 8. லைஃப்ஸ்டைல்
  சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
 9. உலகம்
  வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
 10. விளையாட்டு
  கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி