பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
X

நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், என்றும், கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துதல், விலைவாசிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டமானது, நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்றது.

அப்போது உடனடியாக பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், என்றும், கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கன்டன முழங்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் வகாப் கூறுகையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள அதிமுக அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, தமிழகத்தில் ஏங்கேயும், ஒரு ஆர்ப்பாட்டமோ, அல்லது, எதிர்ப்பையோ இதுவரை பதிவு செய்ய வில்லை என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்றும், ஆனால் மத்திய அரசின் இந்த செயலை கண்டு களத்தில் போராடி கொண்டிருப்பது நாம் தமிழர் கட்சி மட்டுமே என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!