கொரொனா நிவாரண நிதிக்கு தன் சம்பளத்தை வழங்கிய தலைமை காவலர்

கொரொனா நிவாரண நிதிக்கு தன் சம்பளத்தை வழங்கிய தலைமை காவலர்
X
கொரொனா பேரிடர் நிதிக்காக.

திண்டுக்கல் மாவட்டம் பழனி குபேரபட்டினத்தை சேர்ந்தவர் பாபு( 36). இவரது தந்தை தலைமை காவலராக பணிபுரிந்துள்ளார். பி.ஏ தமிழ் இலக்கியம் படித்துள்ள பாபு கடந்த 2008 ஆம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார்.

தற்போது ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலையில் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ தனியார் நிறுவனங்களும் , பொது நல அமைப்புகளும், பொதுமக்களும் தங்களால் முடிந்த பங்களிப்பை அரசுக்கு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைமை காவலர் பாபு தனது ஒரு மாத சம்பளமான 34,474 ரூபாயை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திடம் கொரொனா பேரிடர் நிதிக்காக வழங்கினார்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தனது ஒரு மாத சம்பளத்தொகையான 25 788 ரூபாயை வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர வேண்டும்.

பேரிடர் காலங்களில் அனைவரின் பங்களிப்பும் இருந்தால் கட்டாயமாக நாம், கொரொனா இரண்டாம் அலையை முறியடிக்க என பாபு தெரிவித்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!