வானதி சீனிவாசன் பிரச்சாரம் துவக்கம்

வானதி சீனிவாசன் பிரச்சாரம் துவக்கம்

கோயமுத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயகுமார்,அமமுக வேட்பாளர் துரை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வகாப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனு தாக்கலுக்கு பின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இன்று காலை லட்சுமி நரசிம்மர் கோவிலில் வழிபட்ட பின்னர் கெம்பட்டி காலனி பகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அவர் எம்ஜிஆர், ஜெயலிதா உருவபடங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து பின்னர் கெம்பட்டி காலனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.முன்னதாக மாற்று கட்சியில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.

Tags

Next Story