அரசியல் தொழில் அல்ல, எங்கள் கடமை- கமல்ஹாசன்

அரசியல் தொழில் அல்ல,  எங்கள் கடமை- கமல்ஹாசன்
X

கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிட கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ சுப்பிரமணியத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து பேட்டியளித்த கமல்ஹாசன்,இது என் முதல் தேர்தல். வாழ்த்துகளை எதிர்பார்க்கின்றேன். என்னுடைய தேர்தல் வியூகம் நேர்மை தான். எங்களிடம் இருக்கும் இந்த நேர்மை மற்றவர்களிடம் இருக்காது. எங்களின் திட்டத்தையும் செழுமையும் நம்பி களமிறங்கி இருக்கின்றோம்.

மான்செஸ்டர் என்ற புகழ் மங்காமல் இருக்க பணிசெய்வோம். கோவை தெற்கு தொகுதியில் பல பிரச்சனைகள் இருக்கின்றது. அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. கோவை மண்டலத்திற்கு தேவையான விமான விரிவாக்கம், மெட்ரோ போன்றவை செய்யப்படாமல் இருக்கின்றது. முன்மாதிரி தொகுதியாக இந்ததொகுதியை மாற்ற முடியும். என் நண்பர்கள் உறவினர்கள் இங்கு இருக்கின்றனர். இனி கோவையை மையமாக வைத்துக்கொண்டு பிரச்சாரம் இருக்கும். அரசியல் எங்களுக்கு தொழிலல்ல. அரசியல் எங்கள் கடமை என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!