அதிமுக பரிசுப் பொருட்கள் பறிமுதல்

அதிமுக பரிசுப் பொருட்கள் பறிமுதல்
X
கோவையில் அதிமுக பரிசுப் பொருட்கள் பறிமுதல் -பறக்கும் படை நடவடிக்கை.

ஜெயலலிதா படம் போட்ட வேஷ்டி, சேலை, தட்டுகள் அடங்கிய 68 தொகுப்புகள் கைப்பற்றப்பட்டன.

சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை ராமநாதபுரம் அருகேயுள்ள பாரதி நகர் ஆறாவது வீதியில் பரிசுப்பொருட்கள் இருப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் சோதனை நடத்தியதில் அதிமுக பூத் ஏஜென்ட் அனிதா என்பவரின் வீட்டில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படம் போட்ட வேஷ்டி, சேலை, தட்டுகள் அடங்கிய 68 தொகுப்புகள் கைப்பற்றப்பட்டன. இதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தெற்கு வட்டாச்சியரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!