/* */

சாமி சிலைகளுடன் சுற்றிய 2 பேர் கைது

சாமி சிலைகளுடன் சுற்றிய 2 பேர் கைது
X

கோயமுத்தூரில் சாமி சிலைகளுடன் சுற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயமுத்தூர் அரசு மருத்துவமனை அருகே 2 பேர் நேற்றிரவு சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்தனா். அவா்களின் கையில் சாக்குப்பை இருந்தது. இது தொடர்பாக தகவலறிந்த பந்தயசாலை காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து அவா்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா். மேலும் அவா்களிடம் இருந்த சாக்குப்பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனா்.

அப்போது அதில் வெண்கலத்தினால் செய்யப்பட்ட 2 சாமி சிலைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவா்கள் இருவரையும் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் இருவரும் புலியகுளம் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் மதுரையை சேர்ந்த மகேஷ் என்பதும் தெரிய வந்தது. சாமி சிலைகள் திருடப்பட்டதா அல்லது எப்படி கிடைத்தது என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 March 2021 11:45 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 2. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 4. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 5. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 6. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
 7. லைஃப்ஸ்டைல்
  ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 9. நாமக்கல்
  வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
 10. லைஃப்ஸ்டைல்
  சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்