தேர்தல் வெற்றி திமுக மீது வைகோ நம்பிக்கை
கோவை மாவட்ட மதிமுக அலுவலகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பெறப்பட்ட தேர்தல் நிதி 80.80 லட்ச பணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து பேசிய வைகோ, "தற்போது அரசியல் கட்சிகள் நிதி கேட்டுசெல்லும் நிலையில் இல்லை. நிதி அவர்களிடம் குவியல் குவியலாக குவிந்து கிடக்கின்றது. நிதியை வாரி வீசும் சக்தி அவர்களிடம் இருக்கின்றது. நிதிகேட்டு செல்லும் அளவிற்கு தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இல்லை. ஆனால் மதிமுக மட்டும்தான் நிதி கேட்டு இன்னமும் மக்களிடம் செல்கின்றது. மக்கள் மனமகிழ்ச்சியோடு நிதி கொடுப்பதுதான் நமக்கான அங்கீகாரம்.
சுற்றுசுழல் அமைப்புகளை பிற கட்சிகள் தற்பொது துவங்கும் நிலையில், மதிமுக சுற்று சுழல் விவகாரத்தில் மற்றவர்களுக்கு முன்னொடியாக இருந்து வருகின்றது. தமிழகத்திற்கே வழிகாட்டும் கட்சியாக, நன்மைக்காக, வாழ் வாதாரங்களை மீட்க போராடும் கட்சியாக மதிமுக இருந்து வருகின்றது. பத்திரிகைகளுக்கு நம் மீது நல்லெண்ணம் கிடையாது.
பதவிதான் பெரிது என்றால் கேபினட் வாய்ப்பு வந்த போது பதவியை ஏற்று இருக்க முடியும். சிறையில் இருந்து வந்தவுடன் போட்டியிட்டு இருந்தால் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்க முடியும். குறுக்குசால் ஓட்டும் வேலைகள் மதிமுக விடம் எடுபடாது. திராவிட இயக்கத்தை காக்க, சனாதன படையெடுப்பை தடுக்க திமுக வுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தோம். கொள்கை, லட்சியத்திற்கான முறையில் செயல்பட வேண்டும். விமர்சனங்களுக்கு ஆளாகின்ற நிலைப்பாட்டை எடுக்கமுடியாது. சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அணி வெற்றி பெறுவதற்கு வாயப்புதான் அதிகம். தேர்தலுக்கு பின்னர் பொதுகுழுவை கூட்டி சில நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu