/* */

கோவையில் முதல்வருக்கு வாண வேடிக்கையுடன் வரவேற்பு

உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் வாண வேடிக்கையுடன் வரவேற்றனர்.

HIGHLIGHTS

கோவையில் முதல்வருக்கு வாண வேடிக்கையுடன் வரவேற்பு
X

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தொண்டாமுத்தூர் பகுதியில் தேர்தல் பரப்புரையை முடித்த பின்னர், எடப்பாடி பழனிசாமி உக்கடம் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

இதையொட்டி அங்குள்ள பூங்கா பகுதி வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் ஐ லவ் கோவை என்ற செல்பி கார்னரில் அதிமுகவின் சாதனைகள் திரையிடப்பட்டன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாண வேடிக்கை உடன் அதிமுகவினர் வரவேற்றனர். கோவையில் 8 குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உக்கடம் குளத்தில் நடக்கும் பணிகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Updated On: 24 Jan 2021 3:15 PM GMT

Related News