/* */

வினா வங்கி புத்தகங்களை அமைச்சர் வழங்கினார்

பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக வினா வங்கி புத்தகங்களை தன் சொந்த நிதியில் இருந்து 1195 பேருக்கு இலவசமாகஅமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்.

HIGHLIGHTS

வினா வங்கி புத்தகங்களை அமைச்சர் வழங்கினார்
X

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள அம்மணி அம்மாள் பெண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் பயிலும் 407 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து கோவை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக வினா வங்கி புத்தகங்களை தன் சொந்த நிதியில் இருந்து 1195 பேருக்கு இலவசமாக வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசுகையில், கடந்த 22 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வினா வங்கி புத்தகங்களை வழங்கி வருவதாகவும், மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள இப்புத்தகங்கள் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு தரமான வினா வங்கி புத்தகங்கள் தயாரிக்கப் பட்டுள்ளதாகவும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெரும்பாலான வினாக்கள் வினா வங்கிப் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதாகவும் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.

Updated On: 21 Jan 2021 12:45 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
 2. ஆன்மீகம்
  விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
 3. லைஃப்ஸ்டைல்
  பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
 4. வீடியோ
  🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
 5. வீடியோ
  🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
 6. லைஃப்ஸ்டைல்
  நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
 7. கும்மிடிப்பூண்டி
  குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
 8. ஈரோடு
  சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
 9. லைஃப்ஸ்டைல்
  முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
 10. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?