சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது-கே.எஸ்.அழகிரி
சசிகலா விடுதலையால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என கோவையில் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கோயமுத்தூர் கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகின்ற 23 முதல் 25 ம் தேதி வரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் என்றார்.வெற்றி வாய்ப்புள்ள தொகுதிளை கூட்டணி கட்சிகளுக்கு தரக்கூடாது என்ற உதயநிதி ஸ்டாலின் கருத்து குறித்த கேள்விக்கு, வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் என்ன செய்வது? இதுபோன்ற சிறு சிறு பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வோம். கமல்ஹாசன் தனித்து நின்றால் பாஜகவிற்கு தான் சாதகமாக இருக்கும். கமல்ஹாசனை பீ டீம் என்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என பாஜக முடிவு செய்வது கொடுமையானது. சசிகலா விடுதலையால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் கிடையாது. 7 பேர் விடுதலை செய்யப்பட்டால் அதை காங்கிரஸ் எதிர்க்கவும் செய்யாது. ஆதரிக்கவும் செய்யாது. நீதிமன்றம் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம் எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu