கோவை: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை:  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
X
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 30 இலட்சத்து 62 ஆயிரம் வாக்களர்கள் உள்ளனர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 30 இலட்சத்து 62 ஆயிரத்து 744 பேர் உள்ளனர்.

மாவட்டத்தில் ஆண் வாக்களரைவிட 43 ஆயிரத்து 268 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். மேலும் புதிதாக 1 இலட்சத்து 27 ஆயிரத்து 522 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 4 இலட்சத்து 61 ஆயிரம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 2 இலட்சத்து 5 ஆயிரத்து 335 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து 35 ஆயிரத்து 551 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்