சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: அமைச்சர் வேலுமணி

சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: அமைச்சர்  வேலுமணி
X
கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க புறவழிச்சாலை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் உட்பட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

கோவை வஉசி பூங்கா பகுதியில் உள்ள சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சறுக்கு விளையாட்டு மைதானம் ஓடு தளத்துடன் பயிற்சியாளர்கள் ஓய்விடம், பார்வையாளர் அரங்கு, கழிவறைகள், குடிநீர் வசதி, மின் விளக்குகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் மாநகராட்சி சார்பில் சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், சறுக்கு விளையாட்டை பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக இந்த விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளது எனவும், கோவையிலிருந்து குழந்தைகள் சறுக்கு விளையாட்டில் மாநில அளவில் பல்வேறு வெற்றிகளைப் பெற்று வருகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் இங்கு பயிற்சி பெறும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார்கள் என நம்பிக்கை தெரிவித்த அவர் கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க புறவழிச்சாலை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் உட்பட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story
scope of ai in future