கோவை அருகே விபத்தில் இருவர் பலி

கோவை அருகே விபத்தில் இருவர் பலி
X
கோவை அருகே வேன் - ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கோவை மதுக்கரை சீரபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (62). கோவையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். மனைவி ராஜாமணி (60). இவர்களது மகள் குழந்தைகளான கிசோர் 17, ரித்தீஷ் 7, ஆகிய நன்கு பேரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடுமலைபேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு பொங்கல் விழாவிற்கு சென்றுள்ளனர். பின் மீண்டும் இன்று அதிகாலையில் வாடகை வேனில் கோவை நோக்கி வந்துள்ளனர். அப்போது ஈச்சனாரி பைபாஸ் சந்திப்பில் வந்த போது, நாகூரில் இருந்து பயணிகளுடன் அதிவேகமாக கோழிக்கோடு நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து மீது வேன் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

இதில் வேனில் வந்த பழனியை சேர்ந்த ஓட்டுநர் முகமது ஆசிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதில் வந்த நடராஜன், ராஜமணி, கிசோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு சுந்தராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுப்பி வந்தனர். ராஜாமணி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story