வேளாண் திருத்த சட்ட நகல் எரிப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

வேளாண் திருத்த சட்ட நகல் எரிப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்றம் மத்திய அரசு விதித்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிராக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பின்பும் டெல்லியில் விவசாயிகள் சட்டத்தை திரும்பப் பெறும் வரை டெல்லியை விட்டு செல்லமாட்டோம் என தொடர்ந்து பனியிலும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போகி பண்டிகையை ஒட்டி, வேளாண் திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க கூட்டியக்கம் அழைப்பு விடுத்தது. இதன்பேரில் கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, அன்னூர், சூலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடுகளின் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு அச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags

Next Story