வேளாளர் சமுதாயத்தின் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்குவதை கண்டித்து கோவையில் நான்கு திசை வேளாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேளாளர் சமுதாயத்தின்  பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்குவதை கண்டித்து   கோவையில் நான்கு திசை வேளாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X
தமிழகத்தில் நான்கு சமூகத்தை சேர்ந்தவர்கள் "வேளாளர்" என்ற பெயரை புனைப்பெயராக வைத்துள்ளனர். இந்த சூழலில், வேளாளர் என்ற பெயரை மாற்று சமூகத்தினருக்கும் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவையில் நான்கு திசை வேளாளர்கள் சங்கத்தின் சார்பில், கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் நான்கு சமூகத்தை சேர்ந்தவர்கள் 'வேளாளர்' என்ற பெயரை புனைப்பெயராக வைத்துள்ளனர். இந்த சூழலில், வேளாளர் என்ற பெயரை மாற்று சமூகத்தினருக்கும் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு திசை வேளாளர்கள் சங்க்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, வேளாளர் என்ற பெயரை மற்று சமுகத்தினருக்கு வழங்க கூடாது என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
future of ai act