கோவையில் 8 நாட்களுக்கு பிறகு  இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள்

கோவையில் 8 நாட்களுக்கு பிறகு  இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள்
X

தடுப்பூசி முகாம்

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக  கடந்த எட்டு நாட்களாக நடைபெறாத நிலையில், இன்று கோவையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கோவையில், தட்டுப்பாடு காரணமாக கடந்த எட்டு நாட்களாக தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை. இந்த சூழ்நிலையில் 6500 தடுப்பூசிகள் நேற்றைய தினம் கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொது முகாம்களுக்கு பதிலாக இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

மாவட்ட முழுவதும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி முகாம்களும், மாநகராட்சி மையங்களில் 5 மையங்களில் 65 வயதுக்கு மேற்பட்டோர்க்கு இரண்டாம் கட்ட கோவிட்ஷீல்டு தடுப்பூசி மட்டும் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கர்ப்பிணிகளுக்கு மற்றும் பாலூடும் தாய்மார்களுக்கான தடுப்பூசி முகாம்கள் அவர்கள் சிகிச்சை பெற்ற அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் போடப்படும் என அறிவிடுக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேநேரம், 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான முகாம், மாநகர பகுதிகளில் அறிவித்ததை போன்று 4 முகாம்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவையில், தினசரி கொரோனா பாதிப்பு 400 க்கு கீழ் பதிவாகி வரும் நிலையில் பொது தளர்வுகளால் கொரோனா பாதிப்பு அச்சம் நிலவுவதால் உடனடியாக அனைத்து தரப்பு மக்களுக்குமான தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future