வேளாண்மை பல்கலைகழகத்தில் காவி திருவள்ளுவர் படம் அகற்றம்..!

வேளாண்மை பல்கலைகழகத்தில் காவி திருவள்ளுவர் படம் அகற்றம்..!
X

காவி உடையில் திருவள்ளுவர்

நூலக நுழைவாயிலில் காவி திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் காவி திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத்தின் நுழைவாயிலில் காவி உடையணிந்த படம் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். காவி திருவள்ளுவர் படம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அப்படம் அகற்றப்பட்டுள்ளது. வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் படத்தை பல்கலைகழக நிர்வாகம் வைத்துள்ளது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!