/* */

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' : கோவையில் 50 நாட்களில் 100 மனுக்களுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்பட்டவற்றில், 100 மனுக்கள் மீது 50 நாட்களில் தீர்வு காணப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் : கோவையில் 50 நாட்களில் 100 மனுக்களுக்கு தீர்வு
X

தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஒப்புகைச் சான்றுகளை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பயனாளிகளுக்கு வழங்கினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக தலைவர், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் இந்த மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

அதன் பின்னர், திமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களில், முதற்கட்டமாக 100 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புகைச் சான்றுகளை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு வழங்கினார். ஆட்சியர் சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 29 Jun 2021 12:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்