/* */

கோவையில் ரிமோட் மூலம் சிக்னல் இயக்கும் திட்டம்; போக்குவரத்து போலீசார் அறிமுகம்

கோவையில் ரிமோட் மூலம் சிக்னல் இயக்கும் திட்டத்தை போக்குவரத்து போலீசார் இன்று அறிமுகம் செய்து வைத்தனர்.

HIGHLIGHTS

கோவையில் ரிமோட் மூலம் சிக்னல் இயக்கும் திட்டம்; போக்குவரத்து போலீசார் அறிமுகம்
X

ரிமோட் மூலம் சிக்னலை இயக்கும் காவலர்.

கோவை மாநகரில் அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மருதமலை ரோடு உள்பட பல்வேறு இடங்களில் 52 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இந்த சிக்னல்களை போக்குவரத்து போலீசார் அமர்ந்து இயக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் சிக்னல்களை தன்னிச்சையாக இயக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. இதனால் அதிக வாகனங்கள் தேங்கி நிற்கும் ரோட்டில் தேவையான நேரம் அவகாசம் கொடுத்து போக்குவரத்து சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். போலீசார் பணியில் இல்லாத சமயத்தில் டைமர் முறையில் இயக்கி வருகின்றன.

போக்குவரத்து போலீசார் சிக்கல்களை நிழற்குடையில் அமர்ந்து இயக்குவதால் சிலர் சிக்னலை மதிக்காமல் செல்வதும் அதிக வேகமாக வாகனத்தை இயக்குவது போன்ற விதி மீறல்கள் நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து காவலர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து இறங்கி வந்து விதிமுறைகளை தடுக்க முடியாததால் வாகன ஓட்டிகள் தப்பி விடுகின்றனர்.

இதையடுத்து சோதனை முயற்ச்சியாக சிக்னல்களை போலீசார் ரோட்டில் நடந்து கொண்டே ரிமோட் மூலம் இயக்கும் வகையிலான திட்டம் கோவையில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில், முதற்கட்டமாக சோதனை முறையில் டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் ரிமோட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர் ரிமோட் மூலம் சிக்னல்களை இயக்குவார் என தெரிவித்தார்.

மேலும் நிழற்குடையில் அமராமல் சாலையில் நடந்தபடி போக்குவரத்தை நெரிசலை கட்டுபடுத்துவதுடன் விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் முடியும் எனவும் சாலை விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை பிடிக்க முடியும் என்றார்.

இந்த சென்சார் மூலம் சிக்னல் இருந்து 100 மீட்டர் தூரம் வரை இயக்க முடியும் எனவும் அடுத்த கட்ட சோதனை முயற்சியாக லாலி ரோடு சந்திப்பில் உள்ள சிக்னலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் படிப்படியாக மாநகர் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Updated On: 27 Aug 2021 11:45 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
 2. லைஃப்ஸ்டைல்
  உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
 3. லைஃப்ஸ்டைல்
  வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
 4. லைஃப்ஸ்டைல்
  முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
 5. இந்தியா
  மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
 6. லைஃப்ஸ்டைல்
  வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
 7. லைஃப்ஸ்டைல்
  சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
 8. உலகம்
  வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
 9. விளையாட்டு
  கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
 10. வணிகம்
  நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!