அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள்

அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள்
X

புகழேந்திக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.

அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் போஸ்டர்கள்.

அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்தவர் புகழேந்தி. இவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதனை எதிர்த்து புகழேந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் தற்போது புகழேந்தி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், புரட்சித்தலைவி அம்மாவிற்கு ஜாமீன் வழங்கிய அஞ்சாநெஞ்சன் புகழேந்தி நீக்கத்திற்கு கண்டனம்..! அனாதை கட்சியா அ இஅண்ணா திமுக, கூட்டணிக் கட்சிகள் அவமானப்படுத்தி பேசுவதா, இதனை கண்டித்தால் கட்சியில் இருந்து நீக்குவதா, மானமிகு தொண்டர்களே இந்த தலைமை தேவையா.? கோவை கழக உண்மை விசுவாசிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings