போக்சோ குற்ற வழக்குகள் குறைந்துள்ளன : எஸ்.பி. செல்வநாகரத்தினம் தகவல்

போக்சோ குற்ற வழக்குகள் குறைந்துள்ளன : எஸ்.பி. செல்வநாகரத்தினம் தகவல்
பெண் காவலர்களுக்கான வாகன செயற்பாட்டை துவக்கி வைத்த காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்.
குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்குகள் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாக கோவை எஸ்.பி தெரிவித்துள்ளார்.

கோவை காவலர் பயிற்சி பள்ளியில் நவீன வசதிகளுடன் பெண் காவலர்களுக்கு புதிய வாகனங்கள் செயற்பாட்டை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார் வரக்கூடிய காவல் நிலையங்களுக்கு பிரத்யேகமான செல்ஃப் ஹெல்ப் டெஸ்க் அமைக்கபட்டுள்ளது. 18 காவல் நிலையங்களுக்கு புகார்களை நேரிடையாக சென்று விசாரனை மேற்கொள்ள ஏதுவாக இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புகார்தாரர்கள் காவல் நிலையத்திற்கு வராமல் அவர்கள் இருக்கும் இடத்திலேயே சென்று புகார் மனு மற்றும் வாக்குமூலம் பெற்று நடவடிக்கைகள் எடுப்பதற்கான முன்னேற்பாடாக இந்த திட்டம் இருக்கும். இதன்மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக வரும் புகார்களை நேரிடையாக சென்று விசாரணை மேற்கொண்டு தீர்வு காண முடியும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வரும் புகார்களை முக்கியத்துவம் அளித்து விசாரணை மேற்கொள்ள பெண் காவலர்களுக்கு அறிவுறுத்தபட்டு உள்ளது. மேலும் போக்சோ சட்டத்தில் இதுவரை இருபது முதல் இருபத்தி ஐந்து வழக்குகள் பதியப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான வழக்குகளே பதிவாகி உள்ளது என்றார்.

Tags

Next Story