கையிருப்பு இல்லை, கோவை மாநகராட்சியில் இன்றும் தடுப்பூசி இல்லை

கையிருப்பு இல்லை, கோவை மாநகராட்சியில் இன்றும் தடுப்பூசி இல்லை
X

தடுப்பூசி முகாம்

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது

கோவை மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுவதும் தடுப்பூசி வந்த பின்னர் அப்பணிகள் மீண்டும் நடப்பதுமாக இருந்து வருகிறது. தடுப்பூசிகள் குறைவாக இருந்ததால் கடந்த சில நாட்களாக இரண்டாவது தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது.

தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கோவை மாநகராட்சி பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும்கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்கி தடுப்பூசிகளை போட வேண்டும் என்பது கோவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்