கோவையில் இன்று 230 பேருக்கு கொரோனா பாதிப்பு: தொற்று பரவல் அதிகரிப்பு

கோவையில் இன்று 230 பேருக்கு கொரோனா பாதிப்பு: தொற்று பரவல் அதிகரிப்பு
X

கொரோனா பரிசோதனை

கோவையில் இன்று 230 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 42 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 42 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் தினசரி பாதிப்பு மீண்டும் 200 ஐ கடந்துள்ளது.

கோவையில் இன்று 230 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 29 ஆயிரத்து 106 உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 25 ஆயிரத்து 13 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 4 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2176 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings