அதிமுக துரோக கூட்டணி என டிடிவி தினகரன் பேச்சு

அதிமுக துரோக கூட்டணி என டிடிவி தினகரன் பேச்சு
X
கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார் அப்போது அதிமுக துரோக கூட்டணி என தெரிவித்தார்.

கோவை சிவானந்தா காலணி பகுதியில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணி துரோக கூட்டணி எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்கள் நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் எனவும், ஊழலற்ற ஆட்சி, வெளிப்படையான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர் எனவும் கூறிய அவர்,

உண்மையான அம்மா (ஜெயலலிதா) ஆட்சியை அமமுக தருமென தெரிவித்தார். ஒரே மாற்று சக்தி அமமுக தான் எனவும், ஆட்சி இருப்பவர்களும், இருந்தவர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

முதியோர் ஊதியத்தொகையை தர முடியாத எடப்பாடி பழனிசாமி, மாதந்தோறும் 1500 தருவரா எனவும், உள்ளாட்சி துறை அதிகாரி ஒருவரிடம் 50 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அது யாருடைய பணம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தேர்தலில் மக்கள் ஏமாந்து விட்டால், திருவோடு ஏந்தி அலைய வேண்டும் எனவும், விக்கிரவாண்டி, நாங்குநேரியில் குக்கரின் விசில் சத்தம் கேட்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி செய்த துரோக செயலுக்கு பெயர் ராஜ தந்திரமா எனக் கேட்ட அவர், மத்திய அரசு தயவில் 4 ஆண்டுகளை அதிமுக ஓட்டி விட்டது எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி காஜானாவை தூர்வாறி விட்டார் எனவும், திமுகவினரே ஆச்சரியப்படும் வகையில் அதிமுகவினர் ஊழல் செய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். காய்ந்த மாடு போல திமுக ஆட்சிக்கு வர காத்திருக்கிறது எனவும், பண மூட்டைகளை நம்பி ஏமந்துவிடாதீர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!