மருத்துவர் பாதுகாப்புச்சட்டம் இயற்றக்கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

மருத்துவர் பாதுகாப்புச்சட்டம் இயற்றக்கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை வடவள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ சங்கத்தினர்.

தேசிய அளவிலான மருத்துவர் பாதுகாப்புச்சட்டத்தை இயற்றக்கோரி, இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள், கோவை வடவள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் உள்ள மருத்துவர்களைப் பாதுகாக்க தேசிய அளவிலான பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி, இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள், கோவை வடவள்ளி பகுதியில் கருப்பு பேட்ஜ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை மற்றும் மருத்துவர்களை காக்க வலியிறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ரவிக்குமார், செயலாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

இது குறித்து சங்கத்தின் மாநில செயலாளர் ரவிக்குமார் கூறுகையில், "இந்தியாவில் சமீப காலமாக மருத்துவர்களை நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர். வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டாக்டர்கள் பலத்த காயம் அடைந்தும் சிலர் உயிரிழந்துள்ளனர். மருத்துவப் பணிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கும் இந்த நிலையை மாற்ற வேண்டும். தேசிய அளவிலான மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

நோய்தொற்று காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றும் மருத்துவர்களை கடுமையாக தாக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்களை தற்போது புதிதாக பொறுப்பேற்ற அரசு கவனத்தில் கொண்டு மருத்துவர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நோயாளிகளின் உறவினர்கள் அத்துமீறிய செயல்களை தடுக்க மத்திய அரசு தேசிய அளவிலான மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

Tags

Next Story