கொரோனா விதிமுறை மீறல் தனியார் நிறுவனத்துக்கு அபராதம்

கொரோனா விதிமுறை மீறல்    தனியார்  நிறுவனத்துக்கு  அபராதம்
X
வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அபராதம் விதிப்பு

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதால், கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள பயணிகளுக்கு இ - பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாநகராட்சி அதிகாரிகள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மீண்டும் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் கணபதி அருகே சங்கனூர் சாலையில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் இருப்பது தெரியவந்தது. கொரோனா பரவும் வகையில் செயல்பட்டதால் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்ககவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமெனவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!