/* */

கோவையில் 290பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு இல்லை

கோவையில் இன்று, 290 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உயிரிழப்பு இல்லை.

HIGHLIGHTS

கோவையில் 290பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு இல்லை
X

கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் இன்று தினசரி பாதிப்பு 300 க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில், 290 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 19 ஆயிரத்து 322 பேராக உயர்ந்துள்ளது.

கோவையில் ஆறுதல் அளிக்கும் செய்தியாக, கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உயிரிழப்புகள் ஏற்படாதது, நம்பிக்கையை தந்துள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2107 ஆக உள்ளது.

Updated On: 12 July 2021 3:45 PM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் - அமைச்சர் வேலு!
 2. தேனி
  உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி எது?
 3. செங்கம்
  செங்கம் பகுதியில் நெல் மணிலா பயிர்கள் சேதம்!
 4. நாமக்கல்
  அரசுப் பள்ளிகளில் இன்று இ-சேவை மையம்!
 5. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 6. கோவை மாநகர்
  மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
 7. வீடியோ
  🔴 LIVE : அந்த நடிகர் யாருன்னே தெரியாது! எல் முருகன் பத்திரிக்கையாளர்...
 8. திருவண்ணாமலை
  ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்: கூடுதல் ரயில்கள் இயக்க பக்தர்கள்...
 9. உலகம்
  வங்கதேச விடுதலை: ஹிட்லரால் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத...
 10. வீடியோ
  NIA அலுவலகத்திற்கு வந்த போன் கால்! | தீவிரமாகும் புலன் விசாரனை...