கோவையில் புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு

கோவையில் புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை (பைல் படம்)

கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 23 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் குறையத் துவங்கியுள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 23 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 206 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 37 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 931 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2281 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!