கோவை யோகா பாட்டிக்கு சி.பி.எஸ்.இ. பாடத்தில் அங்கீகாரம்

கோவை யோகா பாட்டிக்கு சி.பி.எஸ்.இ. பாடத்தில் அங்கீகாரம்
X

யோகா பாட்டி நாணம்மாள்.

முதுமைக் காலத்திலும் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர். மேலும் ஏராளமான யோகா மாணவர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்கியவர்.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில், யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. கோவை கணபதி பகுதியை சேர்ந்த நாணம்மாள் 99 வயது வரை வாழ்ந்தவர். இவர் முதுமைக் காலத்திலும் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர். மேலும் ஏராளமான யோகா மாணவர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்கியவர். பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியவர்.

இந்நிலையில் சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில், இந்தியாவின் முதுமையான யோகா ஆசிரியரான இவர், கோவையை சேர்ந்தவர் எனவும், 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரிடம் படித்த, 600 க்கும் மேற்பட்ட இவரது மாணவர்கள் தற்போது யோகா ஆசிரியராக பயிற்சி அளிக்கின்றனர். 2016ல், மத்திய அரசின் 'நாரி சக்தி புரஸ்கார்' விருதும், 2018 ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். 2019ல் காலமானார் ஆகிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றதால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், யோகா பாட்டி நாணம்மாள் குறித்து அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil