டிவிட்டரில் கோரிக்கை வைத்த இளைஞர் - தேடிச் சென்று உதவிய காவலர்கள்

டிவிட்டரில் கோரிக்கை வைத்த இளைஞர் - தேடிச் சென்று உதவிய காவலர்கள்
X
கண்ணன் என்பவர் கோவை மாவட்ட காவல் ட்விட்டர் பக்கத்தில் தான் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து கோரிக்கை வைத்தார்.

கோவை மாவட்டம் வேடபட்டியில் உள்ள கே.ஜி. கார்டன் சிட்டி குடியிருப்பில் வசித்து வருபவர் சுந்தரி (58). இவரது மகன் கண்ணன் என்பவர் கோவை மாவட்ட காவல் ட்விட்டர் பக்கத்தில் தான் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து கோரிக்கை வைத்தார். அதில் தமது குடும்பம் வேடப்பட்டியில் குடியிருப்பில் இருப்பதாகவும் வயதான தாய், நடக்க முடியாத தந்தை மற்றும் தனது தங்கையின் குழந்தைகள் 2 பேர் ஆகியோருடன் உண்ணுவதற்கு உணவு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக உதவி செய்ய வேண்டி கேட்டுக்கொண்டார். இதன் பேரில் வடவள்ளி காவல் துறையினர் நேரில் சென்று அரிசி பருப்பு மற்றும் ஒரு வார காலத்திற்கு தேவையான காய்கறிகளை கொடுத்து உதவினர். காவல் துறையினருக்கு அக்குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்