ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்:கோவை எம்.பி. கடிதம்
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் கொரானா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தெற்கு ரயில்வே மேலாளர் மற்றும் டிவிசன் மேலாளருக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மே 10 ஆம்தேதி முதல் 24 ஆம்தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. ஊரடங்கினால் ரயில்வே சேவைகள், பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ உள்ளிட்ட பயண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயில் அரசு அலுவலகங்களில் ஷெட், ஷாப்களிலும் 50% சதவீத தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அத்தகைய தொழிலாளர்களுக்கு கொரானா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ரயில்வே மருத்துவமனைகளில் தேவையான ஆக்ஸிஜன் மருந்துகள் எப்போது தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
ரயில்வே துறையில் உள்ள இஞ்சினியரிங், டிராபிக், எலக்ட்ரிக்கல் ஏசி /டிஎல் , சிக்னல், கேரேஜ் வேகன் மெக்கானிக்கல், டிஆர்டி, ஓட்டுனர் கார்டு போன்ற ஊழியர்கள் ஓடும் பாதையில் ஓப்பன் லைனில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சங்கிலி தொடர் போல பிரியாமல் கூட்டமாக பணி செய்து வருகிறார்கள். ஓப்பன் லைன் ஊழியர்களுக்கு இதுவரை கொரானா தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள் தேவைக்கேற்ப வழங்கப்படவில்லை.
உடனடியாக, ஓப்பன் லைன் ஊழியர்களுக்கு கொரனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை, தெற்கு ரயில்வே மேலாளர் உறுதி படுத்தப்பட வேண்டும். 50% சதமான ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும். கொரானா தொற்றுள்ளவருக்கு சிறப்பு விடுப்பு, ஓய்வு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu