கோவையில் போதை மாத்திரை விற்பனை கும்பல் கைது ; போலீசார் அதிரடி
கைது செய்யப்பட்டவர்கள்
கோவை மாவட்டத்தில் பெரும் தொற்று நோய் பரவல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வுகளை பயன்படுத்தி மாநகர பகுதிகளுக்குள் சமூக விரோதிகள் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சாய்பாபா காலனி அடுத்த கோவில் மேடு தவசி நகர்ப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சாலையோரம் நின்றிருந்த காரில் இருந்த நால்வரிடம், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் வலி நிவாரணத்திற்காக உட்கொள்ளக் கூடிய மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி அதிக அளவில் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் சாய்பாபா காலனி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாத்திரையை ஊசியின் மூலம் உடம்பில் செலுத்தி போதையை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பது தெரியவந்தது.
கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஜானகி ராமன், டிவிஎஸ் நகரை சேர்ந்த பார்த்திபன், இடையர்பாளையத்தை சேர்ந்த கபிலேஷ், குனியமுத்தூரை சேர்ந்த முகமது அப்சல் ஆகிய நால்வரும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
விஇதனையடுத்து அவர்களிடமிருந்து 650 மாத்திரைகள், 11,500 ரூபாய் ரொக்கம் மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu