கோவையில் லஞ்ச புகாருக்கு வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்: ஆட்சியர் அறிவிப்பு
கோவை ஆட்சியர் சமீரன்
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் பொதுமக்கள் பாா்வையில் படும்படியும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் 'லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்' என்ற பலகை வைத்திருக்க வேண்டும். லஞ்சம் பற்றிய புகாா்களை நேரிலோ அல்லது செல்போன் வாயிலாகவோ தெரிவிக்கும் விதமாக காவல் துணைக் கண்காணிப்பாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலக முகவரி, செல்போன் எண்ணுடன் கூடிய பலகை வைத்திருக்க வேண்டும். இதில் இயக்குநா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, எண்- 293, எம்.கே.என்.சாலை, ஆலந்தூா், சென்னை-16. தொலைபேசி எண்: 044-24615989, 044-24615929, 044-24615949.
காவல் துணைக் கண்காணிப்பாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, எண்-4, முதல் தெரு, ராமசாமி நகா், தீயணைப்புத் துறை அலுவலகம் அருகில், கவுண்டம்பாளையம், கோவை-30, தொலை எண்: 0422-2449500 மேற்கண்ட அலுவலகங்கள் தவிர கோவையில் லஞ்சம் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் அளிப்பதற்கு 95977 87550 என்ற பிரத்யேக வாட்ஸ் ஆப் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமும் பொதுமக்கள் லஞ்ச புகாா்களை அளிக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu