கொரோனா கண்காணிப்பு பணிகள்: ஆட்சியர், அமைச்சர் ஆய்வு

கொரோனா கண்காணிப்பு பணிகள்: ஆட்சியர், அமைச்சர் ஆய்வு
X

கோவை ரயில் நிலையத்தில் ஆட்சியர் சமீரன், அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு.

ரயில் மூலம் கோவை வரும் பயணிகளிடம் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர்த்த மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநில எல்லைகள் மற்றும் ரயில் நிலையத்தில் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கோவை வரும் பயணிகளிடம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடமும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்படுகிறது. இல்லையெனில் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!