வாக்கு எண்ணிக்கை மையத்தில் வசதிகள் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வசதிகள் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
X

அடிப்படை வசதிகள் கேட்டு பாஜகஆர்ப்பாட்டம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் போதிய வசதிகள் கேட்டு கோயமுத்தூரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 10 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் முகவர்களும் அங்கு தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தங்கி இருக்கும் முகவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறி பா.ஜ.க மாவட்ட தலைவரும் , தலைமை ஏஜென்டுமான நந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது முகவர்களுக்கு கழிவறை, தங்குமிடம், உணவு வசதி கூட இங்கு கிடையாது என்றும், வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் முகவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும், ஆனால் அதை அரசு செய்து கொடுக்கவில்லை என தெரிவித்தார்.கொரோனா காலத்திலும் அனைத்து கட்சிகளின் முகவர்களும் குறுகிய இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டு இருப்பதாகவும், அதிகாரிகள் நாளை முதல் உரிய அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்து இருப்பதாகவும் , அப்படி செய்து கொடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் எனவும் பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்