'பைக் சாதனையில் விபரீதம்' வீடியோவால் சிக்கிய 6 புள்ளிங்கோ

பைக் சாதனையில் விபரீதம்   வீடியோவால் சிக்கிய 6 புள்ளிங்கோ
X
கோவை சரவணம்பட்டி பகுதியில் 6 இளைஞர்கள் ஓரே பைக்கில் பயணம் செய்த வீடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் கைது செய்தனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் 6 இளைஞர்கள் ஓரே பைக்கில் பயணம் செய்த சாதனையை, சிலர் வீடியோவாக வெளியிட்டதால் செமத்தியாக போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர்.

கோவை சரவணம்பட்டியில் இருந்து 6 இளைஞர்கள் ஒரே பைக்கில் நெருக்கமாக உட்கார்ந்து பயணம் செய்தனர். அதை அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ போலீசார் கண்களிலும் சிக்கியது. சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சாகசம் செய்தவர்கள் குறித்து போக்குவரத்து போலீசார் வாகனத்தின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பைக்கின் உரிமையாளர் 2 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவருக்கு விற்றுவிட்டது தெரிய வந்தது. அவர் பெயர் மாற்றம் செய்யாமல் அந்த பைக்கை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. தொடர்ந்து கோவை மாநகர போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில், சாகசப் பயணத்தில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!