கோவையில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு
கொரோனா பரிசோதனை
கோவையில் இன்று மீண்டும் தொற்று பாதிப்புகள் அதிகரித்து, மீண்டும் தினசரி பாதிப்பில் முதலிடத்தை பிடித்தது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 20 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவையில் இன்று 249 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 32 ஆயிரத்து 114 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று கொரோனா தொற்றில் இருந்து 196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 27 ஆயிரத்து 599 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 6 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2207 ஆக அதிகரித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu