/* */

கோவையில் புதிதாக 216 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 216 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோவையில் புதிதாக 216 பேருக்கு கொரோனா
X

கொரோனா பரிசோதனை ( பைல் படம்)

கோவையில் இன்று மீண்டும் தினசரி பாதிப்பு அதிகரித்து, தொற்று பாதிப்பு 200 ஐ கடந்துள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 35 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் இன்று 216 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 35 ஆயிரத்து 41 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறையத் துவங்கியுள்ளது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 232 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 671 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2252 ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 26 Aug 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு