கோவையில் ஊரடங்கு விதிகளை மீறினால் அபராதம் - காவல் துறை எச்சரிக்கை

கோவையில் ஊரடங்கு விதிகளை மீறினால் அபராதம் - காவல் துறை எச்சரிக்கை
X
கோவை மாநகர பகுதியில் 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் எனவும் விதிகளை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து விதியை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

தொடர்ந்து கோவை காந்திபுரம் பகுதியில் சட்டம் ஒழுங்கு மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் சோதனை சாவடிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாநகர பகுதியில் 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து உள்ளதாகவும், ஊரடங்கு விதியை மீறுவோருக்கு ரூபாய் 500 அபராதம் விதிப்பதாகவும், முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் கொரோனா தொற்று அச்சத்தை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story