கோவை காவல்துறை சார்பில் கையெழுத்து இயக்கம்

கோவை காவல்துறை சார்பில் கையெழுத்து இயக்கம்
X

சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கோயமுத்தூர் போலீசார் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள்.

வருகின்ற ஏப்ரல் 6 ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோயமுத்தூர் மாநகர காவல் நிலையங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் போலீசார் கலந்து கொண்டு கையெழுத்திட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு