பாஜக கூட்டணிக்கு திருமாவளவன் வருமாறு, வானதி சீனிவாசன் அழைப்பு

Coimbatore News, Coimbatore News Today- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. (கோப்பு படம்).
Coimbatore News, Coimbatore News Today- கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள அங்கன்வாடி மையத்தை பாஜக மகளிரணி தேசிய தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மையங்கள் மீது அரசு அதிக கவனம் கொடுக்க வேண்டும். கர்நாடக தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம். தோல்விக்கான காரணத்தை கட்சித் தலைமை ஆராயும். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பை பூரணமாக நிறைவேற்றும் வகையில் கர்நாடக தேர்தல் முடிவு எங்களை தயார் படுத்துகிறது. தோல்விக்கு குறிப்பிட்ட காரணம் என்று எதையும் சொல்ல முடியாது. வழக்கமான வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது.
.தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது போல் திராவிட நிலப்பரப்பு என்று மற்ற மாநில முதல்வர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். திமுக எத்தனை முறை புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. ஈரோடு இடைத்தேர்தல் நடந்தது ஏன் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு அவ்வளவு அமைச்சர்களை வைத்து வேலை செய்தார்கள்.
சொந்தத் தொகுதியில் தோற்றதால், பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி தமிழ்நாட்டை வழிநடத்த முடியாது என சொல்ல முடியாது. கர்நாடக தேர்தலில் அண்ணாமலை அவரது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளார். மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு கர்நாடகத்தின் தோல்வி பிரச்னையாக இல்லை. இதேபோல் ராஜஸ்தான் ,மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கவில்லை. ஆனாலும் முழுமையாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவினர் ஜெயித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பளிப்பார்கள். பாஜக ஆட்சி மீண்டும் அமையும் என்பது நூறு சதவீதம் உறுதி. தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை பார்த்து வருகிறார். சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி, அவர் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என, வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu