கொசு உற்பத்தி மையமான கோவை அரசு மருத்துவமனை

கொசு உற்பத்தி மையமான கோவை அரசு மருத்துவமனை
X

கோவை அரசு மருத்துவமனை 

கோவை அரசு மருத்துவமனை கொசு உற்பத்தி செய்யும் மையமாக மாறியுள்ளதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்

நவீன தொழில்நுட்பங்கள், கருவிகள் புகுத்தப்பட்டாலும், ஒரு சில விஷயங்களில் அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரையில் மாறாமலே இருந்து வருகிறது. குறிப்பாக சுகாதாரம் பேண வேண்டிய மருத்துவமனையில் அது மருந்துக்கூட இருப்பது இல்லை. இதற்கு கோவை அரசு மருத்துவமனையும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

கோவையில் சுமாரான மழை பெய்தாலே போதும், அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கி பலரும் அவதிக்குள்ளாவது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் கோவை அரசு மருத்துவமனையின் நுழைவாயில் அருகே மழைநீர் தேங்கியது. இந்த மழைநீரை அப்புறப்படுத்தாததால் அது கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதியாக மாறியுள்ளது.

இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இம்மழைநீர் தேங்கியுள்ள பகுதிக்கு அருகிலேயே அவசர சிகிச்சை பிரிவு அமைந்துள்ளது. இதனால், இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் கொசுக்களால் அவதியடைகின்றனர். நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனை நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே நோயாளிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் கூறுகையில், 'நுழைவுவாயிலில், மழைநீர் வடிகால் ஏற்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், பணிகள் நடக்கும். மேலும், மழைநீர் தேங்கும் போது அதை அகற்ற மோட்டார்கள் வாங்கப்பட உள்ளன. அதன்பின் பிரச்னை இருக்காது. தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாவதை தடுக்க கொசு மருந்து அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil