கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜி (பைல் படம்)
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள ஓட்டலில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழக அரசின் பட்ஜெட்டில் கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கி ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம், மத்திய சிறைச்சாலை வளாக பகுதியில் 166 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழி பூங்கா அமைக்க ரூ.172.21 கோடி ஒதுக்கீடு.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.100 கோடி மதிப்பில் விடுதிகள் கட்டப்படும். சிப்காட் அமைக்க ரூ.410 கோடி ஒதுக்கீடு, முக்கிய பொது இடங்களில் வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கோவைக்கு வழங்கிய முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பரிந்துரை செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆகியோருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கருணாநிதியின் பிறந்தநாளை வருகிற ஜூன் 3-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு 3-ம் தேதி வரை ஓராண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட வேண்டும். இதையொட்டி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 100 நிகழ்ச்சிகள் நடத்தவும், ஏழை, எளியோருக்கு உதவும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் முன்னெடுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 3-ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஜூன் 3-ம் தேதிக்குள் நிறைவேற்றிட வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu