கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் வேளாண் பொருட்களுடன் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். மேலும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ஆதரவாக விவசாய நிலங்களை இருகூர் பேரூராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி வருவதாக கூறி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாழைத்தார், தென்னங்குருத்து, மட்டை ஆகிய பொருட்களுடன் நூதன முறையில் போராட்டத்தில் ஈடடுபட்டனர். விவசாய சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமையில் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, விவசாய சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இருகூர் பேரூராட்சியில் விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு அருகில் சில தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இடத்தை வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக 30 அடி உள்ள சாலையை விரிவுபடுத்த இருகூர் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கிறது.
மேலும், இதற்காக தென்னை மரங்களை வெட்ட வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் மரங்களில் அம்புக்குறியிட்டு சென்று உள்ளனர். விவசாயிகள் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமத்து உள்ளதாக பொய்யான குற்றசாட்டை சுமத்தி வருகின்றனர் என பழனிசாமி தெரிவித்தார்.
எந்தவித கோரிக்கையும் இல்லாமல் சாலையை விரிவுபடுத்த தன்னிச்சையாக முயற்சிக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் தங்களது கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu