கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
X

கோவை சரக டிஐஜி விஜயகுமார்.

dig vijayakumar suicide: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

dig vijayakumar suicide:கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜி.,யாக விஜயகுமார் பதவியேற்றுக் கொண்டார். மேலும் நீட் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் தான் சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையராக பணியாற்றிய விஜயகுமார், கோவை சரக டிஐஜி.,யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஜனவரி 7ம் தேதி அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று, டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே அவர் மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது.

விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் சேர்ந்தார். பின்னர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை சரக டி.ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!